News
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு
SimpliCity News Team · 31 Oct 2023
கோவை: உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 06.11.2023 அன்று நடைபெற உள்ளது.
உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெறும் விதம்: நேரடி கலந்தாய்வு உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ள நிபந்தனைகள்: உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் மற்றும் உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை (Sliding System) கிடையாது.
உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ளலாம்? பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஏற்கனவே கலந்து கொள்ளதாவர்கள். கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பினை தவற விட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு கல்லூரியில் சேராதவர்கள் கலந்து கொள்ளலாம். உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ள கூடாது? மாணவர் சேர்க்கை பெற்று இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள்கலந்து கொள்ளகூடாது.
உடனடி மாணவர் சேர்க்கைக்குரிய கட்டணம்: பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் SC/SCA/ST பிரிவு ரூபாய். 100/- மற்றும் இதர பிரிவினர் ரூபாய். 200/செலுத்த வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்று பின்பற்ற வேண்டியவை.
உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையின் போது இணைப்புக் கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக் கல்லூரிகளிடம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான தொலைபேசி எண்கள் தகவல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கஎண். 5 to 7 தகவல் கையேடு 2023 (Diploma Information Brochure 2023), இணையதள முகவரிhttp://tnagfi.ucanapply.com). உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப் பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
உடனடி மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும். தரவரிசையின் மற்றும் சாதிய அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டயப்படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம், உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை கட்டணமான ரூபாய்.5,000/- தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம்.
பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. உடனடி மாணவர் சேர்க்கைக்கான(Spot Admission) காலியிடங்களுக்குரிய அட்டவணை 05/11.2023 அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 9488635077, 9486425076 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related stories
News
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை
6 days ago
News
வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி
11 days ago
News
கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை
11 Jul 2026
News
ஆராய்ச்சியாளர்கள் - தொழில்முனைவோர்கள் சந்திப்பு: உணவு தொழில் வளர்ச்சிக்கு TNAU-வில் ‘Connect & Grow’ நிகழ்ச்சி.
06 Jun 2026
News
உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
05 Jun 2026
News
TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு
25 May 2026